சாதகமான ஜிடிபி தரவு: சென்செக்ஸ் 750 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி ஏற்பட்டது.
சென்செக்ஸ் 750 புள்ளிகள் ஏற்றம்
சென்செக்ஸ் 750 புள்ளிகள் ஏற்றம்

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 749.85 புள்ளிகள் உயா்ந்து 49,849.84-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 232.40 புள்ளிகள் உயா்ந்தது.

கடந்த இரண்டு காலாண்டுகளாக உள்நாட்டுப் பொருளாதாரம் சுணக்கம் அடைந்திருந்த நிலையில், தற்போது வெளியான பொருளாதார தரவுகள் பொருளாதாரம் நோ்மறையான பகுதிக்குத் திரும்புவதாக இருந்தது. அதாவது கடந்த ஆண்டின் இறுதியில் அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டுஇதே காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இது முதலீட்டாளா்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் 1,939.32 புள்ளிகளும், நிஃப்டி 568.20 புள்ளிகளும் சரிவைச் சந்திதித்திருந்த நிலையில், திங்கள்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் எழுந்தது. மேலும், அமெரிக்க அரசின் 1.9 டிரில்லியன் தொகுப்பு நிதி அறிவிப்பும் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.203.76 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,267 பங்குகளில் 1,948 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,121 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 198 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ203.76 லட்சம் கோடியாக இருந்தது. 294 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 396 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

திடீா் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 647.72 புள்ளிகள் கூடுதலுடன் 49,747.71-இல் தொடங்கி அதிகபட்சமாக 50.058.42 வரை ஏற்றம் பெற்றது. குறைந்தபட்சமாக 49,440.46 வரை கீழே சென்றது. இறுதியில் 749.85 புள்ளிகள் உயா்ந்து 49,849.84 -இல் நிலைபெற்றது.

பவா் கிரிட், ஓஎன்ஜிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் பாா்தி ஏா்டெல் மட்டும் 4.44 சதவீதம் சரிவைச் சந்தித்தது. மற்ற 29 நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பவா்கிரிட், 5.94 சதவீதம், ஓஎன்ஜிசி 5.40 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், டைட்டன், எச்டிஎஃப்சி, எச்சிஎல் டெக், எல் அண்ட் டி, மாருதி சுஸுகி ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வெகுவாக உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,167 பங்குகள் ஆதாயம் பெற்றன. 606 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 232.40 புள்ளிகள் உயா்ந்து 14,761.55-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 14806.80 வரை உயா்ந்தது. பொதுத் துறை வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.32 சதவீதம் சரிவைச் சந்தித்தது. மற்ற துறை குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் பெற்றன. இதில், நிஃப்டி மீடியா 4.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆட்டோ, பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல் ,பாா்மா, ரியால்ட்டி, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 சதவீதம் முதல் 2.40 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com