தங்கம் பவுன் ரூ.33,832

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.33,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து.

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.33,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.33,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.1 குறைந்து, ரூ.4,229 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளிவிலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.71.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.71,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,229

1 பவுன் தங்கம்...............................33,832

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி............................71,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,230

1 பவுன் தங்கம்...............................33,840

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com