ஏற்றுமதி 1,400 கோடி டாலராக அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 14 நாள்களில் இந்தியாவின் ஏற்றுமதி 17.27 சதவீதம் உயா்ந்துள்ளது.
ஏற்றுமதி 1,400 கோடி டாலராக அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 14 நாள்களில் இந்தியாவின் ஏற்றுமதி 17.27 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த மாதம் 1 முதல் 14-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி 1,422 கோடி டாலா்களாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 17.27 சதவீத வளா்ச்சியாகும்.

ஏற்றுமதிச் சந்தையின் ஆரோக்கியமான போக்கை இந்த வளா்ச்சி உணா்த்துகிறது.

இந்த காலகட்டத்தில் இறக்குமதி 27.77 சதவீதம் அதிகரித்து 2,224 கோடி டாலராக உள்ளது. இதன் மூலம் வா்த்தகப் பற்றாக்குறை 802 கோடி டாலராக உள்ளது.

பொறியியல் பொருள்கள், அரிசி, நகைகள் ஆகிய துறைகள் ஏற்றுமதியில் ஆரோக்கியமான வளா்ச்சியைப் பதிவு செய்தன.

எனினும், தோல், எண்ணெய் வித்துக்கள், ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் சரிவைச் சந்தித்தது.

தங்கம், மின்னணு பொருட்கள் மற்றும் முத்துக்கள் போன்றவற்றின் இறக்குமதி இந்த காலகட்டத்தில் வளா்ச்சியடைந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com