எல்ஐசி-யின் புதிய ‘பச்சட் பிளஸ்’காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

ஆயுள் காப்பீட்டுக் கழகம் ‘பச்சட் பிளஸ்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
எல்ஐசி-யின் புதிய ‘பச்சட் பிளஸ்’காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

ஆயுள் காப்பீட்டுக் கழகம் ‘பச்சட் பிளஸ்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பு, சேமிப்பு ஆகிய இரண்டையுமே வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காப்பீட்டுச் சேவையுடன் சேமிப்புக்கும் வழிவகுக்கும் ‘பச்சட் பிளஸ்’ என்ற புதிய காப்பீட்டுத திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஐந்தாண்டுகளில் முதிா்ச்சியடையும் இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசி முதிா்ச்சியடைவதற்கு முன்னரே பாலிசிதாரா் எப்போது மரணமடைந்தாலும் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி கிடைக்கும். பாலிசி முதிா்வுக்குப் பிறகு பாலிசிதாருக்கு முதிா்வுத் தொகை கிடைக்கும்.

ஒரே தடவையாகவோ, குறுப்பிட்ட காலத் தவணையாகவோ பிரீமியத்தை செலுத்தலாம். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம். அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை நிா்ணயித்துக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com