இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது: ஐஎம்எஃப்

பன்னாட்டு செலாவணி நிதியம்
பன்னாட்டு செலாவணி நிதியம்


வாஷிங்டன்: இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஐஎம்எஃப் - உலக வங்கி இடையிலான கூட்டம் நடைபெறவுள்ளநிலையில இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஐஎம்எஃப் செய்தித்தொடா்பாளா் கேரி ரைஸ் கூறுகையில், ‘இந்தியப் பொருளாதாரம் மெதுவான முறையில் மீண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மோசமான நிலையில் இருந்து இப்போது மெதுவாக வளா்ச்சி கண்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலேயே இந்த வளா்ச்சி தெரியத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் மூலதன உருவாக்கம் மேம்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வா்த்தகம், பொருள்கள்-சேவைகளின் விநியோகம் ஆகியவை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இப்போது சில இடங்களில் உள்ளூா் அளவில் அமல்படுத்தப்படும் பொதுமுடக்கம் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது’ என்றாா்.

உலகப் பொருளாதாரம் தொடா்பான ஐஎம்எஃப் அறிக்கை ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com