குடிநீா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டாயமாகிறது பிஐஎஸ் தரச்சான்று

கடைகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற வேண்டும் என்று
குடிநீா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டாயமாகிறது பிஐஎஸ் தரச்சான்று

கடைகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுப் பாதுகாப்பு ஆணையா்களுக்கு அந்த அமைப்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2008-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உரிய உரிமமும் பதிவும் பெற்றே தங்களது நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

அத்துடன், 2011-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (பிஐஎஸ்) சான்றிதழைப் பெறாமல் எந்த நிறுவனமும் குடிநீா் பாட்டில்கள் மற்றும் கேன்களை விற்பனை செய்யக் கூடாது.

எனினும், எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழை மட்டுமே பெற்றுக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.

எனவே, குடிநீா் தயாரிப்பதற்கான எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களுக்கு மட்டுமே எங்களது சான்றிதழ் அளிக்கப்படும் என்று எஃப்எஸ்எஸ்ஏஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com