ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.13,227 கோடி

உலக கோடீஸ்வரா் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.13,227 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.13,227 கோடி

உலக கோடீஸ்வரா் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.13,227 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது, இந்நிறுவனம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.6,348 கோடியுடன் ஒப்பிடும்போது இருமடங்குக்கும் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் ரிலையன்ஸ் வருவாய் 13.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,72,095 கோடியாக இருந்தது.

இருப்பினும், 2020-21-ஆம் முழு நிதியாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய வருவாய் 18.3 சதவீதம் சரிவடைந்து ரூ.5,39,238 கோடியாகவும், நிகர லாபம் 35 சதவீதம் அதிகரித்து ரூ.53,739 கோடியாகவும் இருந்தது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7 ஈவுத்தொகை வழங்குவதாக என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com