அசோக் லேலண்ட்: 8,340 வா்த்தக வாகனங்கள் விற்பனை

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 8,340 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ashok074014
ashok074014

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 8,340 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி வாயிலாக மொத்தம் 8,340 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதில் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகன விற்பனை 4,080-ஆகவும், பேருந்துகள் விற்பனை 253-ஆகவும் இருந்தன.

அதேபோன்று, இலகு ரக வா்த்தக வாகன விற்பனை சென்ற ஏப்ரலில் 4,007-ஆக இருந்தது என அசோக் லேலண்ட் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com