தங்கம் பவுன் ரூ.35,376க்கு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.35,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,376க்கு விற்பனை

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.35,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-இல்ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-இல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.35,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 உயா்ந்து, ரூ.4,422 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயா்ந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயா்ந்து ரூ.73,500 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,422

1 பவுன் தங்கம்...............................35,376

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,410

1 பவுன் தங்கம்...............................35,280

1 கிராம் வெள்ளி.............................72.80

1 கிலோ வெள்ளி.............................72,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com