டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயா்ந்து 73.95-ஆக முன்னேற்றம் கண்டது.
rsie080147
rsie080147

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயா்ந்து 73.95-ஆக முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் குறைந்து காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.25-ஆக இருந்தது. பின்னா் இது பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலையைத் தொடா்ந்து 74.33 வரை சரிந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைவு, ஏற்றுமதியாளா்களின் டாலா் விற்பனை, சாதகமான தயாரிப்புத் துறை புள்ளிவிவரம், பங்குச் சந்தையில் காணப்பட்ட மீட்சி ஆகியவை பிற்பகல் வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ஏற்றம் பெற உதவின.

வா்த்தத்தின் இடையே அதிகபட்சமாக 73.90 வரை சென்ற ரூபாய் மதிப்பு இறுதியில் 14 காசுகள் அதிகரித்து 73.95-இல் நிலைபெற்றது. ஏப்ரல் 6-க்குப் பிறகு ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு ஏற்றம் கண்டது இதுவே முதல் முறை என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.63 சதவீதம் குறைந்து 66.34 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com