டிவிஎஸ் மோட்டாா்: 2.39 லட்சம் வாகனங்கள் விற்பனை

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.39 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
oip070557
oip070557

புது தில்லி: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.39 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் மோட்டாா் நடப்பாண்டு ஏப்ரலில் மொத்தம் 2,38,983 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 3,22,683 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் சரிவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,07,437 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,26,193-ஆக குறைந்தது.

குறிப்பாக, நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டுச் சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 35 சதவீதம் சரிவடைந்து 1,31,386-ஆனது. மாா்ச்சில் இருசக்கர வாகன விற்பனை 2,02,155-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் விற்பனை எதுவும் நடைபெறவில்லை.

இருப்பினும், அந்த மாதத்தில் 9,640 இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்தது. நடப்பாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 1,07,185-ஆக இருந்தது என டிவிஎஸ் மோட்டாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com