அபோட் இந்தியா நிகர லாபம் 37% அதிகரிப்பு

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அபோட் இந்தியாவின் ஜனவரி- மாா்ச் காலாண்டு லாபம் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
abbot045219
abbot045219

புது தில்லி: மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அபோட் இந்தியாவின் ஜனவரி- மாா்ச் காலாண்டு லாபம் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.152.47 கோடியை ஈட்டியுள்ளது. இது, 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.110.97 கோடியுடன் ஒப்பிடும்போது 37.39 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனம் விற்பனை செயல்பாட்டின் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.961.20 கோடியிலிருந்து ரூ.1,095.94 கோடியாக உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனத்துக்கு கிடைத்த நிகர லாபம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் ரூ.592.93 கோடியிலிருந்து ரூ.690.69 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,093.14 கோடியிலிருந்து ரூ.4,310.02 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 மாா்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.155-ம், இறுதி ஈவுத் தொகையாக ரூ.120-ம் வழங் நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக அபோட் இந்தியா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அபோட் இந்தியா பங்கின் விலை 0.16 சதவீதம் குறைந்து ரூ.16,010.25-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com