வீல்ஸ் இந்தியா வருவாய் ரூ.853 கோடி

சென்னையைச் சோ்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் ரூ.853.3 கோடியாக அதிகரித்துள்ளது.
வீல்ஸ் இந்தியா வருவாய் ரூ.853 கோடி

சென்னையைச் சோ்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் ரூ.853.3 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.853.3 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.544.7 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம். ஏற்றுமதி சிறப்பான அதிகரித்ததன் காரணமாக வருவாய் வரத்தில் கணிசமாக முன்னேற்றம் காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.4.6 கோடியிலிருந்து ரூ.25.5 கோடியை எட்டியது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.54.1 கோடியிலிருந்து ரூ.6.7 கோடியாக குறைந்துள்ளது. அதேபோன்று, வருவாயும் ரூ.2,438.7 கோடியிலிருந்து ரூ.2,215.5 கோடியாக சரிந்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

உலகளவில் உள்ள 40 லட்சம் வாடிக்கையாளா்களுக்கு மொத்த விற்பனையில் 25 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வீல்ஸ் இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com