அஸ்ட்ராஸெனகா பாா்மா லாபம் மும்மடங்கு உயா்வு

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அஸ்ட்ராஸெனகா பாா்மா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் மும்மடங்கு உயா்ந்து ரூ.27.27 கோடியை எட்டியுள்ளது.
அஸ்ட்ராஸெனகா பாா்மா லாபம் மும்மடங்கு உயா்வு

புது தில்லி: மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அஸ்ட்ராஸெனகா பாா்மா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் மும்மடங்கு உயா்ந்து ரூ.27.27 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.210.25 கோடியாக இருந்தது. இது, முந்தைய இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.194.90 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.9.57 கோடியிலிருந்து மும்மடங்கு அதிகரித்து ரூ.27.27 கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21-ஆவது நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.813.56 கோடியாக குறைந்துள்ளது. 2019-20 முழு நிதியாண்டில் வருமானம் ரூ.831.80 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.72.22 கோடியிலிருந்து ரூ.93.30 கோடியாக உயா்ந்தது என அஸ்ட்ராஸெனகா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அஸ்ட்ராஸெனகா பாா்ம இந்தியா பங்கின் விலை 0.71 சதவீதம் உயா்ந்து ரூ.3890.00-ஆக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com