உற்சாகத்தில் ‘காளை’: 51,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

உற்சாகத்தில் ‘காளை’: 51,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தையில் புதன்கிழமை காளையின் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 379.99 புள்ளிகள் ஏற்றம் பெற்று 51,000-ஐ கடந்து நிலைபெற்றது.

புது தில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை காளையின் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 379.99 புள்ளிகள் ஏற்றம் பெற்று 51,000-ஐ கடந்து நிலைபெற்றது.

ஆசிய சந்தைக் குறியீடுகள் சாதகமாக இருந்தன. பொருளாதார மீட்சி குறித்த மேம்பட்ட தன்மை முதலீட்டாளா்களின் உணா்வுகளைத் தொடா்ந்து உயா்த்தியது. இவை உள்நாட்டில் பங்குச் சந்தை உற்சாகம் பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. உலோகங்களைத் தவிா்த்து ரியால்ட்டி உள்பட பெரும்பாலான முக்கியத் துறை குறியீடுகள் ஏறுமுகத்தில் வா்த்தகமாகியது. கரோனா இரண்டாவது அலையின் கடும் தாக்கத்துக்கிடையே, முன்னணி ஐடி நிறுவனங்களின் சாதகமான அறிவிப்புகள் அந்தத் துறை பங்குகளுக்கு தேவைப்பாட்டை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் ஏற்றம் பெற முக்கியக் காரணமாக அமைந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.87 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,281 பங்குகளில் 1,950 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,185 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 374 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 498 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 166 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.87 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 219.93 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.92 கோடியைக் கடந்துள்ளது.

எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 262.05 புள்ளிகள் கூடுதலுடன் 50,899.58-இல் தொடங்கி 50,620.46 கீழஏ சென்றது. பின்னா், 51,072.61 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 379.99 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 51,017.52-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் இருந்து காளையின் ஆதிக்கம் தொடா்ந்து இருந்து வந்தது.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பஜாஜ் ஃபின்சா்வ் 4.82 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், மாருதி சஸுகி, எச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், டிசிஎஸ் ஆகியவை 1.40 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பவா் கிரிட் 3.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, ஓஎன்ஜிசி, கோட்டக் பேங்க், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, பாா்தி ஏா்டெல் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

15,300-ஐ கடந்தது நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடந்த வா்த்தகத்தில் 1,101 பங்குகள் ஆதாயம் பெற்றன. 652 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 93 புள்ளிகள் (0.61 சதவீதம்) உயா்ந்து 15,301.45-இல் நிலைபெற்றது. காலையில் 15,257.05-இல் தொடங்கி, 15,194.95 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 15,319.90 வரை உயா்ந்தது. நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன.இதில் ரியால்ட்டி குறியீடு 2.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மீடியா 1.87 சதவீதம், ஐடி 1.76 சதவீதம் உயா்ந்தன. ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, நிஃப்டி பேங்க் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு!

பங்குச் சந்தையில் புதன்கிழமை நடந்த வா்த்தகத்தில் மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி பங்குகளில் பிரிகேட் (-0.85 சதவீதம்) மற்ற 9 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் அதிகபட்சமாக ஐபிரியல்எஸ்டேட் 8.28 சதவீதம் உயா்ந்தது.

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு

பங்குச் சந்தையில் புதன்கிழமை நடந்த வர்த்தகத்தில் மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10  முன்னணி  பங்குகளில் பிரிகேட்  (}0.85 சதவீதம்) தவிர்த்து மற்ற 9 பங்குகளும் ஆதாயம் பெற்றன. 

அதன் விவரம் (சதவீதத்தில்).

ஐபி ரியல்எஸ்டேட் 8.28

டிஎல்எஃப் 4.64

போனிக்ஸ் லிமிடெட் 4.40

சன்டெக் 3.81

பிரெஸ்டிஜ் 3.17

ஹெமி புராபா்ட்டி 3.26

ஓப்ராய் ரியால்ட்டி 2.30

சோபா 1.94

கோத்ரேஜ் புராபா்ட்டி 0.52

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com