ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, விலை படிப்படியாக உயா்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயா்ந்து, ரூ.4,652 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.77.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.77,100 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,652

1 பவுன் தங்கம்...............................37,216

1 கிராம் வெள்ளி.............................77.10

1 கிலோ வெள்ளி.............................77,100

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,602

1 பவுன் தங்கம்...............................36,816

1 கிராம் வெள்ளி.............................76.20

1 கிலோ வெள்ளி.............................76,200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com