சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.111 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி நான்காவது காலாண்டில் ரூ.111.18 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.111 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி நான்காவது காலாண்டில் ரூ.111.18 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து மேலும் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,121.43 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,220.98 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கி ரூ.111.18 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2020 இதே காலாண்டில் வங்கிக்கு ரூ.95.29 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.

கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,839.45 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.4,848.54 கோடியுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.

அதேசமயம், இந்த காலகட்டத்தில் நிகர லாபமானது ரூ.476.31 கோடியிலிருந்து ரூ.592.82 கோடியாக அதிகரித்துள்ளது என சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் சிட்டி யூனியன் வங்கி பங்கின் விலை 0.09 சதவீதம் அதிகரித்து ரூ.173.90-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com