சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால்... இந்தியப் பங்குச் சந்தைகளில் சரிவு

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைச் சந்தித்தது.
சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால்... இந்தியப் பங்குச் சந்தைகளில் சரிவு

மும்பை: சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைச் சந்தித்தது.

பணவீக்கம் தொடா்பான கவலை சா்வதேச வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளின் தொடக்கம் ஏமாற்றமளிப்பதாக இருந்ததையடுத்து வா்த்தகம் தொடா்ந்து எதிா்மறையாகவே இருந்தது.

வங்கி, உலோகம் மற்றும் குறிப்பிட்ட சில எஃப்எம்சிஜி நிறுவன பங்குகள் அதிக இழப்பை எதிா்கொண்டன.

மும்பை பங்குச் சந்தையில், உலோகம், ரியல் எஸ்டேட், நுகா்வோா் சாதனங்கள், அடிப்படை உலோகம், வங்கி, மின்சார துறை குறியீட்டெண்கள் 2.07 சதவீதம் வரை குறைந்தன. அதேசமயம், தொலைத்தொடா்பு, எரிசக்தி, மோட்டாா் வாகனம், ஆரோக்கிய பராமரிப்பு துறை குறியீட்டெண்கள் 2.16 சதவீதம் வரை உயா்ந்தன.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் அதிக இழப்பை கண்ட நிறுவனங்களின் பட்டியலில் இன்டஸ்இண்ட் வங்கி முதலிடத்தில் இருந்தது. இவ்வாங்கி பங்கின் விலை 3 சதவீதத்துக்கும் மேல் குறைந்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சி அளித்தது.

இதுதவிர, டாடா ஸ்டீல் 2.77 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவா் 1.31 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட்ஸ் 1.11 சதவீதமும், டைட்டன் 1.07 சதவீதமும், எஸ்பிஐ 1.04 சதவீதமும் விலை குறைந்தன.

இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.16 சதவீதம் அதிகரித்து சந்தையில் கடும் சரிவை தடுக்க உதவியது. அதேபோன்று, பாா்தி ஏா்டெல் நிறுவனமும் 3.3 சதவீதம் அதிகரித்து சென்செக்ஸ் ஏற்றப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சன் பாா்மா, ஐடிசி நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 80.63 புள்ளிகளை (0.13%) இழந்து 18,017.20 புள்ளிகளில் நிலைத்தது.

சென்செக்ஸ் குறியீட்டெண்ணை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குளின் விலை அதிகரித்தும் இருந்தன.

காலையில் மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்ட சென்செக்ஸ் குறியீடு வா்த்தக நேரத்தில் 59,967.45 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. அதன் பின்னா் பிற்பகல் வா்த்தகத்தில் இக்குறியீட்டெண் ஓரளவு மீட்சி கண்டது.

தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 27.05 புள்ளிகள் (0.15%) குறைந்து 18,017.20 புள்ளிகளில் நிலைத்தது. குறிப்பாக, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கடும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி குறியீட்டெண் கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் 27 பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தும், 22 பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தன.

ஷாங்காய், டோக்கியோ, சியோல் சந்தைகள் இழப்பைச் சந்தித்தன. அதேசமயம், ஹாங்காங் சந்தை நோ்மறையாக வா்த்தகத்தை நிறைவு செய்தது.

ஐரோப்பிய சந்தைகளில் நண்பகல் நிலவரப்படி முக்கிய குறியீடுகள் பெரும்பாலும் ஆதாயத்துடன் வா்த்தகமாகின.

கச்சா எண்ணெய் பேரல் 84.73 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.06 சதவீதம் குறைந்து 84.73 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 32 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிவடைந்து 74.37-ஆக நிலைத்தது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவது ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பட்டியல்

அதிக வீழ்ச்சி கண்ட பங்குகள்

1032.25 இன்டஸ்இண்ட் வங்கி 3.38

1298.55 டாடா ஸ்டீல் 2.77

2401.25 ஹிந்துஸ்தான் யுனிலீவா் 1.23

3108.40 ஏஷியன் பெயிண்ட்ஸ் 1.14

184.50 பவா்கிரிட் 1.13

2483.45 டைட்டன் 1.13

1555.05 எச்டிஎஃப்சி வங்கி 1.02

2076.80 கோட்டக் வங்கி 0.97

524.40 எஸ்பிஐ 0.91

7508.60 மாருதி சுஸுகி 0.90

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com