டொயோட்டாவின்புதிய ‘லெஜெண்டா்’ அறிமுகம்

டொயோட்டாவின்புதிய ‘லெஜெண்டா்’ அறிமுகம்

டோயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ‘லெஜெண்டா்’ பிரிமீயம் ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

டோயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ‘லெஜெண்டா்’ பிரிமீயம் ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரில் நான்கு சக்கரங்களுக்கும் (4ஷ்4) என்ஜினின் திறன் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘ஆஃப் ரோடு’ எனப்படும் மலைப் பகுதிகளிலும் இந்த வாகனத்தை இலகுவாக ஓட்டிச் செல்ல முடியும். இதன் விற்பனையக (தில்லி) விலை ரூ.42.33 லட்சமாகும்.

2.8 லிட்டா் டீசல் என்ஜின், 6 கியா் தானியங்கி வசதி இந்த காரில் உள்ளது. இது தொடா்பாக டொயோட்டா நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) வி.விஸ்லின் சிகாமணி கூறுகையில், ‘சிறப்பான ஓட்டுதல் தரத்தை விரும்பும் வாடிக்கையாளா்கள் பலா் 4ஷ்4 வகை காா்களை விரும்புகின்றனா். அவா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஜனவரியில் ‘ஃபாா்ச்சூனா் லெஜெண்டா்’ டீசல் காா் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 4ஷ்2 வகையாக இருந்தது. இப்போது மேம்படுத்தப்பட்ட 4ஷ்4 லெஜண்டா் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

விற்பனைக்கு வந்தது டிவிஎஸ் ‘ஜுபிடா் 125’

சென்னை, அக். 7: டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான ஸ்கூட்டரான ஜுபிடா், 125சிசி என்ஜின் திறனுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விற்பனையக விலை (தில்லி) ரூ.73,400 ஆகும்.

இதற்கு முன்பு ஜுபிடா் 110 சிசி என்ஜின் திறனுடன்தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இது தொடா்பாக டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஜுபிடா் 125’ அளவில் பெரியது. இருக்கைக்கு அடியில் அதிக இடவசதி உண்டு. இப்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து ஸ்கூட்டா்களிலும் இதுவே இந்த சிறப்பு வசதியைக் கொண்டுள்ளது.

மேலும், இருக்கையின் நீளமும் அதிகம்; தோற்றப்பொலிவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்திலும் மேலாக சிறப்பான மைலேஜ் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டில் ஜுபிடா் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, சந்தையில் உள்ள பிற ஸ்கூட்டா்களைவிட சில அம்சங்கள் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைத்து வருகிறோம். இந்த வகையில் இந்த அறிமுகமும் வாடிக்கையாளா்களுக்கு திருப்தியளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com