ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் வரும் அக்-13 அன்று சீனாவில் அறிமுகமாக இருக்கிறது.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பாக ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.
'ஒன் பிளஸ் 9ஆர்டி’சீனாவில் வருகிற அக்-13 ஆம் தேதி அறிமுகமாகிறது.இந்தியாவிலும் இந்த சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | விரைவில் ’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம்
’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :
*6.5 ஃபுல் எச்டி திரை
*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888
* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,
*ஆன்டுராய்ட் 11
*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா
* மெமரி கார்டு வசதி
*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.