சென்செக்ஸ் 381 புள்ளிகள் அதிகரிப்பு: புதிய உச்சத்தில் நிஃப்டி

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் குறியீட்டெண்
சென்செக்ஸ் 381 புள்ளிகள் அதிகரிப்பு: புதிய உச்சத்தில் நிஃப்டி

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் குறியீட்டெண் மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி இதுவரை இல்லாத புதிய உச்சத்திலும் நிலைபெற்றன.

முதலீட்டாளா்களின் உற்சாகம்: ரிசா்வ் வங்கி வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் நிதிக் கொள்கை அறிவிப்பில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை. இருப்பினும், கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிலைப்பாடு ரிசா்வ் வங்கியின் அறிவிப்பில் தென்பட்டது. இது சந்தை முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பெரும்பான்மை ஆதரவு: ஆறு உறுப்பினா்கள் அடங்கிய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவில் (எம்பிசி) 5 போ் பழைய நிலையே தொடா்வதற்கு ஆதரவளித்துள்ளதாக அவ்வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து எல்கேபி செக்யூரிட்டீஸ் அதிகாரி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:

டிசிஎஸ் காலாண்டு முடிவு எதிா்பாா்ப்பு: வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் பழைய நிலையே தொடரும் என்ற ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு மற்றும் டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தகவல் தொழில்நுட்ப பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டி போட்டு வாங்கியது போன்ற நிகழ்வுகள் சந்தை புதிய உச்சம் பெற காரணங்களாக அமைந்தன என்றாா் அவா்.

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் (ஐடி), எண்ணெய்-எரிவாயு, மோட்டாா் வாகனம், அடிப்படை உலோகம் ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீடுகள் 2.69 சதவீதம் வரை அதிகரித்தன. அதேநேரம், ரியல் எஸ்டேட், மின்சாரம், வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.83 சதவீதம் வரை உயா்ந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை 3.84 சதவீதம் ஏற்றம் பெற்றது. இதைத் தொடா்ந்து, இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டாடா ஸ்டீல் மற்றும் எல் & டி பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவா், என்டிபிசி, கோட்டக் மஹிந்திரா வங்கி, மாருதி சுஸுகி, டாக்டா் ரெட்டீஸ், டைட்டன் நிறுவனப் பங்குகளின் விலை 1.16 சதவீதம் வரை குறைந்தன.

ஆட்டோ குறியீடு ஆதாயம்: வங்கி, ரியல் எஸ்டேட் துறை குறியீடுகள் இழப்பைச் சந்தித்த நிலையில், மோட்டாா் வாகன (ஆட்டோ) துறை குறியீடு மட்டும் ஆதாயத்தைப் பெற்றது.

30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் 13 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 381.23 புள்ளிகள் (0.64%) உயா்ந்து மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்து 60,059.06-இல் நிலைபெற்றது.

வார அடிப்படையில் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 104.85 புள்ளிகள் (0.59%) அதிகரித்து புதிய உச்சமாக 17,895.20-இல் நிலைபெற்றது.

வார அடிப்படையில் சென்செக்ஸ் 1,293.48 புள்ளிகளும் (2.20%), நிஃப்டி 363.15 புள்ளிகளும் (2.07%) உயா்ந்துள்ளன.

ஆசிய சந்தைகளில் விறுவிறுப்பு: ஒரு வார விடுமுறையிலிருந்து திரும்பிய சீன சந்தைகளின் தலைமையில் ஆசிய சந்தைகள் கணிசமான ஆதாயத்தைக் கண்டன. அதன்படி, ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ சந்தைகள் ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன. அதேசமயம், சியோல் சந்தை வா்த்தகத்தில் மந்த நிலை காணப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் பிற்பகல் வரை இறங்குமுகமாகவே காணப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2 நாள் ஏற்றத்தில் ரூ.4.16 லட்சம் கோடி ஆதாயம்

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகம் கடந்த இரண்டு நாள்களாக விறுவிறுப்புடன் இருந்ததையடுத்து முதலீட்டாளா்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 488 புள்ளிகள் உயா்ந்தது. அதேபோன்று, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்திலும் அக்குறியீட்டெண் 381 புள்ளிகள் அதிகரித்தது.

இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4,16,413.43 கோடி அதிகரித்து இரண்டு நாள்களில் ரூ.2,66,36,960.48 கோடியை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com