தள்ளாட்டத்துக்கிடையே சென்செக்ஸ் 149 புள்ளிகள் அதிகரிப்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. தள்ளாட்டத்துக்கிடையே,
தள்ளாட்டத்துக்கிடையே சென்செக்ஸ் 149 புள்ளிகள் அதிகரிப்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. தள்ளாட்டத்துக்கிடையே, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்
 149 புள்ளிகள் உயர்ந்து 60,284 -ஆக புதிய உச்சம் தொட்டது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயர்ந்து ரூ.267.24 லட்சம் கோடியாக இருந்தது.
 பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிசக்தி நெருக்கடியால் பணவீக்கம் உயரும் என்ற அச்சத்தால் உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், காலாண்டு வருவாய் பருவத்தில் பலவீனமான தொடக்கம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனம் ஆகியவற்றின் விளைவாக ஐடி பங்குகளில் விற்பனை தொடர்ந்தது. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை எதிர்மறையாக தொடங்கியது. இருப்பினும், தனியார்மயமாக்கலின் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் நுகர்வோர் பொருள்கள், உலோக
 மற்றும் ஆட்டோ, பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சென்செக்ஸ் புதிய
 உச்சத்தில் நிலைபெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, இரண்டாவது நாளாக ஐடி குறியீடு சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. சந்தை பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்து வந்தது என்று வர்த்தகர்கள்
 தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,478 நிறுவனப் பங்குகளில் 1,772 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,573 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 342 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 440 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 215 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயர்ந்து ரூ.267.24 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,24,04,291-ஆக உயர்ந்தது.
 புதிய உச்சத்தில் நிறைவு:
 சென்செக்ஸ் காலையில் 90.03 புள்ளிகள் குறைந்து 60,045.75-இல் தொடங்கி, 59,885.39 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 60,331.74 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 148.53 புள்ளிகள் (0.25 சதவீதம்) கூடுதலுடன் 60,284.31-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனமாகத் தொடங்கிய சென்செக்ஸ், பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கத்தில் இருந்தது. ஆனால், பிற்பகலில் முன்னணிப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்ததால், நேர்மறையாக முடிந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 டைட்டன் அபாரம்:
 பிரபல தனியார் நிறுவனமான டைட்டன், 5.55 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 3.25 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்டையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 ஹெச்சிஎல் டெக் கடும் சரிவு: அதேசமயம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 4.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, அல்ட்ரா டெக், டிசிஎஸ், எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
 நிஃப்டி 46 புள்ளிகள் ஏற்றம்:
 தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 46.00 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயர்ந்து 17,991.95-இல் நிலைபெற்றது. காலையில் 17,915.80-இல் தொடங்கிய நிஃப்டி, 17,864.95 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 18,008.65 வரை உயர்ந்தது. நிஃப்டி ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.08 சதவீதம், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு 2.67 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எஃப்எம்சிஜி, மெட்டல், மீடியா, 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com