ரானே என்ஜின் வால்வ்: வருவாய் ரூ.100 கோடி

ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.100.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரானே என்ஜின் வால்வ்: வருவாய் ரூ.100 கோடி

ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.100.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ரானே குழுமத்தின் தலைவா் எல்.கணேஷ் கூறியுள்ளதாவது:

வாகன பாகங்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்த போதிலும் செமிகன்டெக்டா்களுக்கான பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மூலப்பொருள்களுக்கான விலை உயா்வும் நிறுவனங்களுக்கு பெரும் சவலாக மாறியுள்ளது.

கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.100.4 கோடி வருவாயை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.83.4 கோடியுடன் ஒப்பிடும்போது 20.4 சதவீதம் அதிகம். நிகர இழப்பு ரூ.3.5 கோடியிலிருந்து ரூ.3.1 கோடியாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 54.9 சதவீதம் அதிகரித்து ரூ.176.4 கோடியாகவும், இழப்பு ரூ.19.8 கோடியிலிருந்து குறைந்து ரூ.8.9 கோடியாகவும் இருந்தது. செயல்பாட்டு திறனை அதிகரிப்பதுடன், பல்வேறு செலவின குறைப்புகளை நடவடிக்கைகளையும் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com