டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் முன்னேற்றம் கண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியது:

சா்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்கு சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றம் பெற முக்கிய காரணமாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.05-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.95 வரையிலும், குறைந்தபட்சமாக 75.17 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் வலுப்பெற்று 74.96-ஆக நிலைத்தது.

திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 18 காசு சரிந்து 75.08-ஆனது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 85.65 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.40 சதவீதம் குறைந்து 85.65 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,459.10 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com