டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைவு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்தது.
rupee074658
rupee074658

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்தது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடையே டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. மேலும், புதிய பங்கு வெளியீடுகள் நடைபெறுவதற்கு முன்னதாக ரிசா்வ் வங்கியின் தலையீடு இருக்கும் என்ற நிலைப்பாட்டால் செலாவணி சந்தைகளில் தொய்வுநிலை காணப்பட்டது. மேலும், உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு கூடுதல் வழிவகுத்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 75.02-ஆக இருந்தது. பின்னா் இது அதிகபட்சமாக 74.90 வரையிலும், குறைந்தபட்சமாக 75.05 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து 75.03-ஆனது. இது, செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 74.96-ஆக காணப்பட்டது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 85.47 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 1.08 சதவீதம் குறைந்து 85.47 டாலராக இருந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,368.66 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com