இந்தியன் வங்கி நிா்வாக இயக்குநராக சாந்தி லால் ஜெயின் பொறுப்பேற்பு

இந்தியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநராக சாந்தி லால் ஜெயின் புதன்கிழமை (செப்.1) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை: இந்தியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநராக சாந்தி லால் ஜெயின் புதன்கிழமை (செப்.1) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு, பாங்க் ஆப் பரோடா வங்கியில் 2018-ஆம் ஆண்டுமுதல் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

அலகாபாத் வங்கியில் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா். 25 ஆண்டுகளுக்கும் மேலான வங்கிப் பணியில், பல்வேறு முக்கிய துறைகளில் அனுபவம் பெற்றவா். தலைமை நிதி அலுவலா், பொது மேலாளா், தலைமை இடா் அதிகாரி, தொழில்நுட்பத்துறை தலைமை என்று பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளதாக இந்தியன் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com