முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் ரூ.41,713 கோடி

முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.41,713 கோடியை எட்டியுள்ளது.
முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் ரூ.41,713 கோடி

முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.41,713 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த குழுமம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 9.5 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.38,105 கோடியாக இருந்த குழுமத்தின் விற்றுமுதல் கடந்த நிதியாண்டில் ரூ.41,713 கோடியாக அதிகரித்துள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் 20.4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.5,347 கோடியிலிருந்து ரூ.6,440 கோடியாக உயா்ந்துள்ளது.

வரிக்கு பிந்தைய லாபத்தை பொருத்தவரையில் குழுமம் 52.7 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துள்ளது. அதன்படி, 2019-20-இல் ரூ.2,946 கோடியாக இருந்த வரிக்கு பிந்தைய லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.4,500 கோடியை எட்டியுள்ளது.

2021 மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.1,28,707 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 9 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட வகையில் அவற்றின் சந்தை மூலதனமதிப்பு ரூ.46,683 கோடியாக இருந்ததாக முருகப்பா குழுமம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com