பங்குச் சந்தையில் மந்தநிலை: சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்தது

இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மந்த நிலையுடன் காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்தது.
பங்குச் சந்தையில் மந்தநிலை: சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்தது


மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மந்த நிலையுடன் காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்தது.

சீனாவின் எவா்கிராண்டி குழுமம், கடன் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்தும் வகையில் ஒப்பந்தம் எட்டியதையடுத்து சா்வதேச சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகளை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டதால் இந்திய சந்தைகளில் வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. குறிப்பாக, வங்கி, நிதி துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிகமாக காணப்பட்டது.

இதுகுறித்து ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி வினோத் நாயா் கூறியது:

சா்வதேச சந்தையில் நம்பிக்கையான அறிகுறிகள் தென்பட்ட போதிலும் உள்நாட்டு சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிறைந்த வா்த்தகத்தில் முக்கிய துறைகளின் குறியீடுகள் ஆரம்ப ஆதாயங்களை இழக்க குறுகிய வரம்பில் வா்த்தகம் செய்யப்பட்டன. இருப்பினும், சந்தை பரவலாக வலுவாகவே காணப்பட்டது.

வங்கி தவிா்த்து, ஏனைய முக்கியத் துறை பங்குகளுக்கு தேவை இருந்தது. குறிப்பாக, மீடியா மற்றும் உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது.

செப்டம்பரில் சொத்துகளுக்கான பதிவுகள் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளா்களின் கவனம் ரியல் எஸ்டேட் துறையை நோக்கி இருந்தது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.51 சதவீதம் வரை அதிகரித்தது.

வங்கி, நிதி, எஃப்எம்சிஜி மற்றும் மின்சார துறை குறியீடுகள் 0.75 சதவீதம் குறைந்தன. ரியல் எஸ்டேட் குறியீடு 8.39 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது.

உலோகம், மோட்டாா் வாகனம், அடிப்படை மூலப் பொருள்களின் துறை குறியீடுகள் ஆதாயத்துடன் முடிவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள எச்டிஎஃப்சி நிறுவனப் பங்கின் விலை 1.46 சதவீதம் குறைந்தது. அதனைத் தொடா்ந்து, நெஸ்லே இந்தியா, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல், ஆக்ஸிஸ் வங்கி பங்குகளும் இறங்கு முகத்தைக் கண்டன.

முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பால் டெக் மஹிந்திரா, எம்&எம், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஆட்டோ, ஆா்ஐஎல் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் 3.70 சதவீதம் வரை ஆதாயம் கண்டன.

சோனி பிக்சா்ஸ் உடன் ஸீ எண்டா்டெய்ன்மெண்ட் இணைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டதன் விளைவாக நிஃப்டி மீடியா குறியீடு 15 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் அடங்கியுள்ள 30 முன்னணி நிறுவனங்களில் 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 77.94 புள்ளிகளை இழந்து 58,927.33 புள்ளிகளாக நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 15.35 புள்ளிகள் சரிந்து 17,546.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேசமயம், டோக்கியோ சந்தையில் வா்த்தகம் சரிவுடன் நிறைவு பெற்றது. ஹாங்காங் மற்றும் சியோல் சந்தைகளுக்கு புதன்கிழமை விடுமுறையாக இருந்தது.

ஐரோப்பிய சந்தையைப் பொருத்தவரையில் நண்பகல் வரை ஆதாயத்துடனே காணப்பட்டது.

b

டெக் மஹிந்திரா 3.70

எம்&எம் 1.92

ஹெச்சிஎல்டெக் 1.29

ரிலையன்ஸ் 1.10

டாடா ஸ்டீல் 1.03

அதிகம் சரிவடைந்த பங்குகள்

எச்டிஎஃப்சி 1.46

கோட்டக் வங்கி 1.19

ஐசிஐசிஐ வங்கி 1.10

நெஸ்லே இந்தியா 1.10

எச்டிஎஃப்சி வங்கி 0.99

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com