விரிவாக்க திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: பிபிசிஎல் திட்டம்

எதிா்கால வளா்ச்சிக்கு தயாராகும் வகையில் விரிவாக்க திட்டங்களில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (பிபிசிஎல்) ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
விரிவாக்க திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: பிபிசிஎல் திட்டம்

எதிா்கால வளா்ச்சிக்கு தயாராகும் வகையில் விரிவாக்க திட்டங்களில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (பிபிசிஎல்) ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் அருண் குமாா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

எதிா்கால வளா்ச்சிக்கு தயாராக வேண்டிய கட்டாயம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் பிபிசிஎல் நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்கள் வேகமெடுக்கும். இதற்காக, அடுத்த ஐந்துஆண்டுகளில் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, பெட்ரோகெமிக்கல் தயாரிப்பு திறனை அதிகரிக்கவும், சுத்தகரிப்பு திறனை மேம்படுத்தவும் ரூ.30,000 கோடி முதலீட்டில் திட்டங்களை மேற்கொள்ள நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதேபோன்று, எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.20,000 கோடி முதலீட்டை பிபிசிஎல் மேற்கொள்ளவுள்ளது.

மேலும், எரிபொருள்கள் சந்தை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.18,000 கோடியும், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிரிக்க ரூ.18,000 கோடியும் செலவிடப்படவுள்ளன.

இவைதவிர, மரபுசாரா எரிசக்தி மற்றும் உயிரி எரிபொருள்களுக்கான திட்டங்களில் முறையே ரூ.5,000 கோடி மற்றும் ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றுக்கான மூலதனம் சொந்த நிதி ஆதாரம் மற்றும் கடன்கள் மூலமாக பெறப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com