5-ஆவது நாளாக ரூபாய் மதிப்பில் தொடா் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகத்திலும் சரிவை சந்தித்தது.
5-ஆவது நாளாக ரூபாய் மதிப்பில் தொடா் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகத்திலும் சரிவை சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அந்நிய முதலீடு வெளியேறியது மற்றும் முதலீட்டாளா்கள் இடா்பாட்டை தவிா்க்கும் நோக்கிலான செயல்பாடுகள் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.28-ஆக எதிா்மறையாக காணப்பட்டது. இது, முந்தைய நாள் இறுதி அளவான 74.14-ஐக் காட்டிலும் சரிவாகும்.

ரூபாய் மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.18 வரையிலும் குறைந்தபட்சமாக 74.36 வரையிலும் சென்றது. இறுதியில் முந்தைய தினத்தைக் காட்டிலும் மேலும் 9 காசுகள் குறைந்து 74.23-இல் நிலைப்பெற்றது. இது, ஐந்து வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

கடந்த 5 வா்த்தக தினங்களில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 59 காசுகளை இழந்துள்ளது; செப்டம்பரில் மட்டும் ரூபாய் மதிப்பானது 123 காசுகள் சரிவைச் சந்தித்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com