அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது நத்திங் - 1 ஸ்மார்ட்போன்

நத்திங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘நத்திங் 1’ ஸ்மார்ட்போனை நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது நத்திங் - 1 ஸ்மார்ட்போன்

நத்திங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘நத்திங் 1’ ஸ்மார்ட்போனை நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள நத்திங்-1 ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகமாகியுள்ளது.

‘நத்திங் 1’ சிறப்பம்சங்கள் :

*  6.55 இன்ச் அளவுகொண்ட  ஓஎல்ஈடி எச்டி திரை 

*  ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் புராசசர்

*  8 மற்றும் 12ஜிபி ரேம், 128 மற்றும் 256 ஜிபி மெமரி

* பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.

*  4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*  ஆண்டிராய்ட் 12, நத்திங் ஓஎஸ் இயங்குதளம்

இந்தியாவில் இதன் விற்பனை விலை 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.32,999, 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ.35,999 மற்றும் 12ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.38,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com