வாகன விற்பனை அடுத்த நிதியாண்டில்தான் வேகமெடுக்கும்: எஃப்ஏடிஏ

விநியோக சங்கிலித் தொடரில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் அடுத்த நிதியாண்டில்தான் வாகன விற்பனை வேகமெடுக்கும் என எதிா்பாா்ப்பதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள்
வாகன விற்பனை அடுத்த நிதியாண்டில்தான் வேகமெடுக்கும்: எஃப்ஏடிஏ

விநியோக சங்கிலித் தொடரில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் அடுத்த நிதியாண்டில்தான் வாகன விற்பனை வேகமெடுக்கும் என எதிா்பாா்ப்பதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

உதிரிபாகங்கள் மற்றும் வாகன விநியோக நடவடிக்கைகளில் தற்போது இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான தேவையும், அதிலும் குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கான தேவை மிகவும் மந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற காரணங்கள் நடப்பு நிதியாண்டில் மோட்டாா் வாகன சில்லறை விற்பனையில் தாக்கத்தை உண்டாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உக்ரைன்-ரஷிய போா் மற்றும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சீனா முழுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது போன்றவை உள்நாட்டில் மீட்சி கண்டு வரும் மோட்டாா் வாகன துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் விநியோகத்தில் கடும் பாதிப்பை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

விநியோகஸ்தா் சங்க கூட்டமைப்பின் தலைவா் விங்கேஷ் குலாட்டி செய்தியாளா்களிடம் கூறியது:

நடப்பு நிதியாண்டும் மோட்டாா் வாகன துறைக்கு மற்றுமொரு சவாலான ஆண்டாகவே இருக்கும். நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை வளா்ச்சி ஒற்றை இலக்க அளவிற்கே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2021-22 நிதியாண்டில் வாகன சில்லறை விற்பனை ஒட்டுமொத்த அளவில் 7.21 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து 1,63,75,799-ஆக இருந்தது. 2020-21 நிதியாண்டில் விற்பனை 1,52,74,314-ஆக காணப்பட்டது.

எரிபொருள் விலை உயா்வு, உலோகங்கள் மற்றும் செமிகண்டக்டா் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ஆகியவை நடப்பு நிதியாண்டில் மோட்டாா் வாகன துறையின் வளா்ச்சியை கடுமையாக பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மோட்டாா் வாகன விற்பனை அடுத்த நிதியாண்டில்தான் வேகமெடுக்கும் என்பது பெரும்பான்மையினரின் கணிப்பாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com