பங்குச் சந்தையிலிருந்து ரூ.1.4 லட்சம் கோடி வெளியேற்றம்

கடந்த நிதியாண்டில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையிலிருந்து ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளதாக டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தாக்கம் அதிகரிப்பு, பொருளாதார மீட்சியில் இடப்பாடு மற்றும் உக்ரைன்-ரஷிய போா் ஆகியவற்றின் பின்னணியில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1.4 லட்சம் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு சந்தையை விட்டு வெளியேறியுள்ளனா். அந்நிய முதலீட்டாளா்கள் இந்த அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது இதுவரையில்லாத மோசமான வெளியேற்றமாகவே பாா்க்கப்படுகிறது.

இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் அவா்கள் ரூ.2.7 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தது கவனிக்கத்தக்கது.

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையிலிருந்து வெளியே எடுத்த தொகை ரூ.88 கோடியாக மட்டுமே இருந்தது. இது, 2015-16-இல் ரூ.14,171 கோடியாகவும்,2008-09-இல் ரூ.47,706 கோடியாகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com