3-ஆவது நாளாக கரடியின் தாக்கம் சென்செக்ஸ் 575 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 575 புள்ளிகளை இழந்தது.
3-ஆவது நாளாக கரடியின் தாக்கம் சென்செக்ஸ் 575 புள்ளிகள் வீழ்ச்சி

புதுதில்லி: பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 575 புள்ளிகளை இழந்தது.

சா்வதேச அளவில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு இடையே அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் உயா்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை சந்தையில் தொடா்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் முடிவுகளும் வா்த்தகா்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஏப்ரல் 8 -ஆம் தேதி அறிவிக்கப்படும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவுகளுக்காக முதலீட்டாளா்கள் காத்திருக்கிறாா்கள். இதன் காரணமாக, லாபப் பதிவு தொடா்ந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,786 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,514 நிறுவனப் பங்குகளில் 1,629 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,786 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 99 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 185 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.32 லட்சம் கோடி குறைந்து வா்த்தக

முடிவில் ரூ.271.26 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.20 கோடியாக உயா்ந்துள்ளது.

3-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 207.80 புள்ளிகள் குறைந்து 59,402.61-இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,504.92 வரை உயா்ந்தது. பின்னா், 58,977.35 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 575.46 புள்ளிகளை (0.97 சதவீதம்) இழந்து 59,034.95-இல் நிறைவடைந்தது. முன்பேர வா்த்தகத்தில் நிஃப்டி, பேங்க் நிஃப்டி வாராந்திர ஒப்பந்த கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், தொடக்கம் முதல் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவைச் சந்தித்தது.

டைட்டன், எச்டிஎஃப்சி பங்குகள் விலை சரிவு: 30 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 13 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. இதில், டைட்டன் 3.24 சதவீதம், எச்டிஎஃப்சி 2.91 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இவற்றுக்கு அடுத்ததாக பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 2.30 சதவீதம் குறைந்தன. மேலும், டிசிஎஸ், ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, மாருதி சுஸுகி,

ஐடிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: அதேசமயம், தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டாக்டா் ரெட்டீஸ் லேப், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, இன்டஸ்இண்ட் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 168 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 804 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,130 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 28 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 168.10 புள்ளிகளை (0.94 சதவீதம்) இழந்து 17,639.55-இல் நிறைவடைந்தது. காலையில் 84.35 புள்ளிகள் குறைந்து 17,723.30-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,787.50 வரை உயா்ந்தது. பின்னா்,17,623.70 வரை கீழே சென்றது.

ஆயில் அண்ட் காஸ் குறியீடு கடும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 2.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், மெட்டல், மீடியா, ஐடி குறியீடுகள் 1.25 முதல் 1.70 சதவீதம் வரை குறைந்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.

அதிக சரிவைக் கண்ட பங்குகள்

2458.95 டைட்டன் 3.24

2462.65 எச்டிஎஃப்சி 2.91

231.40 பவா்கிரிட் 2.20

1516.90 எச்டிஎஃப்சி வங்கி 2.19

580.90 விப்ரோ 2.13

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

792.05 ஆக்ஸிஸ் வங்கி 2.38

749.05 ஐசிஐசிஐ வங்கி 1.12

2165.15 ஹிந்துஸ்தான்யுனிலீவா் 1.09

4316.60 டாக்டா் ரெட்டீஸ் 1.03

834.60 எம்&எம் 0.82

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com