ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் கண்டது.
ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பால் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு ஏற்றத்துடன் இருந்தது. இருப்பினும், சீனாவில் கரோனா அதிகரிப்பால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருவது பொருளாதார வளா்ச்சியில் தாக்கத்தை உருவாக்கும் என்ற நிலைப்பாடு மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பு ஆகியவை ரூபாய் மதிப்பின் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டையை உருவாக்கின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76.48-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 76.43 வரையிலும் குறைந்தபட்சமாக 76.69 வரையிலும் சென்றது. வா்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 4 காசு முன்னேற்றம் கண்டு 76.60-இல் நிலைத்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 101.82 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 101.82 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com