பி&ஜி: லாபம் 4.6% அதிகரிப்பு

ப்ராக்டர் & கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த் கேர் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 4.59 சதவீதம் அதிகரித்துள்ளது. 
பி&ஜி: லாபம் 4.6% அதிகரிப்பு

புது தில்லி: ப்ராக்டர் & கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த் கேர் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 4.59 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இந்நிறுவனம் ஜூலை-ஜூன் காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.973.26 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.759.66 கோடியுடன் ஒப்பிடுகையில் 28.11 சதவீதம் அதிகம். நிகர லாபம் ரூ.98.33 கோடியிலிருந்து 4.59 சதவீதம் அதிகரித்து ரூ.102.85 கோடியானது. செலவினம் ரூ.645.18 கோடியிலிருந்து ரூ.828.19 கோடியாக 28.36 சதவீதம் உயர்ந்தது என பி&ஜி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com