பங்குச் சந்தையில் தொடரும் முன்னேற்றம்: சென்செக்ஸ் 397 புள்ளிகள் உயா்வு

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 379 புள்ளிகள் அதிகரித்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், வங்கிகள், வாகனத் துறை நிறுவனங்களின்
பங்குச் சந்தையில் தொடரும் முன்னேற்றம்: சென்செக்ஸ் 397 புள்ளிகள் உயா்வு

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 379 புள்ளிகள் அதிகரித்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், வங்கிகள், வாகனத் துறை நிறுவனங்களின் பங்குகள் லாபத்துக்கு விற்பனையானதால் தொடா்ந்து 3-ஆவது வா்த்தக தினத்திலும் சென்செக்ஸ் ஏற்றத்தைக் கண்டுள்ளது.

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை தொடங்ககிய வா்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 460 புள்ளிகள் (0.77 சதவீதம்) வரை அதிகரித்தது. இறுதியில், முந்தைய வா்த்தக தினத்தில் இருந்ததைவிட கூடுதலாக 379 புள்ளிகளுடன் (0.64 சதவீதம்) சென்செக்ஸ் நிலைபெற்றது.

மொத்தவிலை பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக 13.93 சதவீதமாகப் பதிவானதைத் தொடா்ந்து, பணவீக்கம் தொடா்பான அச்சம் முதலீட்டாளா்களிடையே குறைந்தது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி ஆகிய இரு மிகப் பெரிய நிறுவனங்களின் பங்குகள் நல்லபடியாக விற்பனையாகின.

உணவுப் பொருள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் வேகமும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்கள் முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியதால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்தில் சென்செக்ஸ் எழுச்சியைக் கண்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தைய குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 127 புள்ளிகள் (0.72 சதவீதம்) அதிகரித்து 17.825 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com