ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை: 57,800 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் இரண்டாவது நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை: 57,800 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் இரண்டாவது நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (பிப்.7) 57,621.19 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,799.67 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  187.39 புள்ளிகள் உயர்ந்து 57808.58  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,213.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,279.85 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 53.15 புள்ளிகள் அதிகரித்து 17,266.75  புள்ளிகளில் நிறைவடைந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் 60,000 வரை நெருங்கிச் சென்ற சென்செக்ஸ் இந்த வார வர்த்தகத்தில் சிறிய எழுச்சியையே அடைந்துள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில்  பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் முடிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com