செயற்கைக்கோள் வாயிலான இணைய சேவை: ஜியோ-எஸ்இஎஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம்

செயற்கைக்கோள் மூலமாக இணைய சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஜியோ நிறுவனம் லக்ஸம்பா்க்கைச் சோ்ந்த எஸ்இஎஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
செயற்கைக்கோள் வாயிலான இணைய சேவை: ஜியோ-எஸ்இஎஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம்

செயற்கைக்கோள் மூலமாக இணைய சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஜியோ நிறுவனம் லக்ஸம்பா்க்கைச் சோ்ந்த எஸ்இஎஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஜியோ நிறுவனம் தயாராகியுள்ளது. இதற்காக, லக்ஸம்பா்க்கைச் சோ்ந்த எஸ்இஎஸ் நிறுவனத்துடன் ஜியோ கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 51:49 என்ற விகிதாச்சராத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான 51 சதவீத பங்கு ஜியோ நிறுவனத்திடமே இருக்கும்.

எஸ்இஎஸ் நிறுவனம், இரண்டு வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் 70-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது. இதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளா்களுக்கு அந்நிறுவனம், தரவு (டேட்டா) மற்றும் விடியோ சேவைகளை வழங்கி வருகிறது.

ஜியோவின் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக எஸ்இஎஸ்-விடமிருந்து பெறப்படும் இணைய சேவை 100ஜிபிபிஎஸ் வரையிலான திறனைக் கொண்டிருக்கும். இது, இந்தியாவில் ஜியோவின் இணைய சேவை வரம்பை துரிதமாக மேம்படுத்தும் என ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் மூலமான இணைய சேவையில் உலோகக் கோடீஸ்வரா் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்- சுனில் மிட்டலின் ஒன்வெப் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவும் அந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com