ரஷியத் தாக்குதல்: கடும் சரிவில் கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி வணிகம் சமீப காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது ரஷியா-உக்ரைன் போரால் கடும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ரஷியத் தாக்குதல்: கடும் சரிவில் கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி வணிகம் சமீப காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது ரஷியா-உக்ரைன் போரால் கடும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

கிரிப்டோகரன்சி எனப்படும் ’விர்சுவல் வணிகம்’ உலகம் முழுவதும் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த கரன்சிகள் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் பெரிய அளவில்  அதிக முதலீடுகளைப் பெறத் தொடங்கியது.

முன்னதாக நாட்டில் 1.5 கோடி பேர் பல நாணயங்களிலும் பிட்காயின் போன்றவற்றிலும் கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

மேலும், கடந்த ஒரு மாதமாக கிரிப்டோகரன்சி வணிகம் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது ரஷியா உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் கிரிப்டோகரன்சி கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.

இதனால், பலரும் பதற்றத்தில் கடுமையான நஷ்டத்திலேயே தங்கள் முதலீடுகளை விற்று வருவதால் பிட்காயின் 35 லட்சத்திலிருந்து   27 லட்சம் வரை கீழ் இறங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல ஒவ்வொரு கிரிப்டோகரன்சிகளின் விலையும் முன் எப்போதும் இல்லாத சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com