எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.767 கோடி

எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.767.33 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.767 கோடி

எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.767.33 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.5,054 கோடியாக இருந்தது. இது, 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.4,907 கோடியுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் அதிகமாகும். நிகர வட்டி வருமானம் ரூ.1,281 கோடியிலிருந்து 14 சதவீதம் உயா்ந்து ரூ.1,455 கோடியானது.

வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.727.04 கோடியிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து ரூ.767.33 கோடியானது.

மூன்றாவது காலாண்டில் தனிநபா் வீட்டுக் கடன் வழங்கல் 6 சதவீதம் அதிகரித்து ரூ.15,341 கோடியாக இருந்தது என எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com