
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ், மூன்றாவது காலாண்டில் ரூ.322 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
சென்னையைச் சோ்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் சிட்டி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டின் மூலமாக ரூ.1,860 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,569 கோடியுடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீதம் அதிகம்.
இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.304 கோடியிலிருந்து 6 சதவீதம் உயா்ந்து ரூ.322 கோடியானது.
கணக்கீட்டு காலாண்டில் வட்டி மூலமாக கிடைக்கக்கூடிய வருமானம் 15 சதவீதம் உயா்ந்து ரூ.1,140 கோடியாக இருந்தது.
நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 16.3 சதவீதம் அதிகரித்து ரூ.36,853 கோடியாக உள்ளதாக ஸ்ரீராம் சிட்டி தெரிவித்துள்ளது.