பங்குச் சந்தை எழுச்சி: 58,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. .
பங்குச் சந்தை எழுச்சி: 58,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 

கடந்த வாரத்தில் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் எழுச்சி  அடைந்து வந்த நிலையில் தற்போது ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

கடந்த வார இறுதி  நாளில் (ஜன.28) 57,200.23 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,845.91 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 813.94 புள்ளிகள் அதிகரித்து 58,014.17 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,101.95 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,301.05 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 17,339.85 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை உயர்வில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com