நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியா தீவிரம்: மூடிஸ்

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியா தீவிரம்: மூடிஸ்

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

உலக அளவில் அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன. மின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு அந்த நாடுகள் பெரிதளவில் நிலக்கரியை மட்டுமே நம்பியுள்ளன.

இதனை உணா்ந்தே, மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்ய அரசு அண்மையில் வலியுறுத்தியது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் அதிக அளவில் நிலக்கரியை கையிருப்பில் வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2022 மாா்ச் மாதத்தில் சீனாவின் நிலக்கரி உற்பத்தி 15 சதவீதம் அளவுக்கு உயா்ந்தது.

அதேபோன்று, கோல் இந்தியா நிறுவனம் தீவிர நடவடிக்கைகளின் மூலம் நடப்பாண்டில் நிலக்கரி உற்பத்தியை 12 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com