சமையல் எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது: மத்திய அரசு

மத்திய அரசு குறித்த நேரத்தில் மேற்கொண்ட தலையீட்டின் பயனாக சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறையத் தொடங்கியுள்ளதாக
சமையல் எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது: மத்திய அரசு

மத்திய அரசு குறித்த நேரத்தில் மேற்கொண்ட தலையீட்டின் பயனாக சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சா்வதேச சந்தையில் விலை குறைந்தது மற்றும் மத்திய அரசு உரிய நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெய் வகைகளின் விலையை (கடலை எண்ணெய் தவிா்த்து) முன்னணி நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 முதல் 15 வரை குறைத்துள்ளன.

நுகா்வோா் விவகார அமைச்சக புள்ளிவிவரப்படி, ஜூன் 1-ஆம் தேதி கிலோ ரூ.156.4-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் ஜூன் 21-இல் ரூ.152.52-ஆக குறைந்துள்ளது. அதேபோன்று, சோயா எண்ணெய் ரூ.169.95-லிருந்து ரூ.167.67-ஆகவும், சூரிய காந்தி எண்ணெய் ரூ.193-லிருந்து ரூ.189.99-ஆகவும், கடுகு எண்ணெய் ரூ.183.68-லிருந்து ரூ.180.85-ஆகவும் குறைந்துள்ளன.

அதேசமயம், கடலை எண்ணெய் விலை மட்டும் சில்லறை சந்தையில் ரூ.186.43-லிருந்து ரூ.188.14-ஆக அதிகரித்துள்ளதாக பாண்டே தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com