உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வு

உக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டியது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

உக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டியது.

தொடர்ந்து 7-வது நாளாக ரஷியா ராணுவப் படை உக்ரைன் மீது  தாக்குதலை நடத்தி வருவதால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2014, செப்டம்பருக்குப் பிறகு இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலராக அதிகரித்துள்ளது.

2014-இல் பிரெக்ஸிட் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலருக்கு அதிகரித்தது. இதுவே பெரிய உயர்வாகக் கருதப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கச்சா எண்ணெய் 110 டாலரைத் தொட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த 117 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது.

ஐந்து மாநிலத் தோ்தல்கள் முடிவடைந்தவுடன் சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள்களின் மீதான விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், உக்ரைன் போர் எதிரொலியால் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்து வருவதால் முதலீட்டாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com