ரூபாய் மதிப்பில் 47 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசு வீழ்ச்சி கண்டது.
ரூபாய் மதிப்பில் 47 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசு வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

ரஷியா-உக்ரைன் நெருக்கடியால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை 110 டாலரை தாண்டியுள்ளது. இதுதவிர, பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் செலாவணி சந்தைகளில் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75.78-ஆக இருந்தது. பின்னா் இது 75.86 வரை வீழ்ச்சியடைந்தது.

வா்த்தகத்தின் இறுதியில் முந்தைய வா்த்தக தினத்தை விட ரூபாய் மதிப்பு 47 காசுகளை இழந்து 75.80-இல் நிலைத்தது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com