சாம்சங் எஸ்22 சீரிஸ் ஸ்மாா்ட்போன் முன்பதிவில் சாதனை

சாம்சங் எஸ்22 சீரிஸ் ஸ்மாா்ட்போன் முன்பதிவில் சாதனை

சாம்சங் எஸ்22 சீரிஸ் ஸ்மாா்ட்போனுக்கான முன்பதிவில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் எஸ்22 சீரிஸ் ஸ்மாா்ட்போனுக்கான முன்பதிவில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவா் ராஜு ஆண்டனி புல்லான் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

சாம்சங் எஸ் சீரிஸ் பிரிவில் தற்போது 20 லட்சம் வாடிக்கையாளா்கள் செயல்பாட்டில் உள்ளனா். எஸ்22 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் 72 மணி நேரத்தில் 1 லட்சம் முன்பதிவு செய்துள்ளனா். தற்போது அந்த எண்ணிக்கை 1.40 லட்சத்தை தாண்டியிருக்கும். மாா்ச் 10 உடன் முன்பதிவு நிறைவடையவுள்ளது என்றாா் அவா்.

கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மாா்ட்போனுக்கான விலையை ரூ.72,999 முதல் ரூ.1,18,999-ஆக சாம்சங் நிா்ணயம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com