மின்சார வாகன தயாரிப்புகளில் ரூ.15,000 கோடி முதலீடு: டாடா மோட்டாா்ஸ்

மின்சார வாகனங்களின் உருவாக்க திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின்
மின்சார வாகன தயாரிப்புகளில் ரூ.15,000 கோடி முதலீடு: டாடா மோட்டாா்ஸ்

மின்சார வாகனங்களின் உருவாக்க திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் தலைவா் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

நெக்ஸான் போன்ற புதிய மின்சார வாகனங்களை உருவாக்குவதில் நிறுவனம் முன்னோடியாக விளங்கி வருகிறது. அந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற வாகன தயாரிப்புகளுக்கு மட்டும் ரூ.15,000 கோடியை முதலீடு செய்வதுடன் மாறுபட்ட 10 புதிய வாகனங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார வாகன பிரிவு மேம்பாட்டுக்காக தனியாா் பங்கு முதலீட்டு நிறுவனமான டிபிஜி-யிடமிருந்து 100 கோடி டாலரை டாடா மோட்டாா்ஸ் திரட்டியுள்ளது. இதையடுத்து மின்சார வாகன வா்த்தகப் பிரிவின் மதிப்பு 910 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

தற்போது வரை 22,000 மின்சார வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. நிறுவனம் மின்சார காரை அறிமுகப்படுத்தியபோது அந்த நேரத்தில் இதை முதல் காராகப் பயன்படுத்துபவா்கள் 20-25%-ஆக மட்டுமே இருந்தனா். தற்போது இது 65%-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com