இ-ஸ்கூட்டர் விற்பனை: ஹீரோ எலக்ட்ரிக்கை பின்னுக்குத் தள்ளி ஓலா முதலிடம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓலா முதலிடம் பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓலா முதலிடம் பெற்றுள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பல நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி முன்பதிவு வசதியில் உற்பத்தியைக்  துவங்கியிருந்தது. இடையே சிப் தட்டுப்பாட்டால் முன்பதிவை நிறுத்தியது. 

பின், இந்தாண்டு ஜனவரியில் 1,102 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 12,683 வாகனங்களை விற்பனை செய்து புதிய இலக்கை அடைந்துள்ளது. மேலும், ஹீரோ எலக்ட்ரிக் ஏப்ரல் மாதத்தில் 6,570 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதன் காரணமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஹீரோ எலக்ட்ரிக்கை பின்னுக்குத் தள்ளி 4-வது மாத விற்பனையிலேயே ஓலா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com